Sunday, 10 June 2012

வாய்பிளந்து உற்றுநோக்கும் பரிகாசம் மூலம்: எலி க்ளேர் (மொழி பெயர்ப்பு கவிதை)

(Drawing-Gnanaprakasam Sthabathy)

வாய்பிளந்து பரிகாசித்து அருவருப்பூட்டும் கூர்பார்வை, எப்போது முதன்முதலாய் நிகழ்ந்ததெனச் சொல்லத் தெரியவில்லை. எப்போது முதல் ஜோடிக் கண்கள் எனை வயப்படுத்தித் தனது ஒழுக்கமற்ற பிடியில் கைக்கொண்டு தசையினின்று என்பையும் தோலையும் கிழித்தெடுத்ததோ அப்போது. அந்தக் கண்கள் எப்போதும் சப்தமிட்டனசபலமுறு, சுணங்கு, ஒடுங்கு என, நடுங்கும் என் கரங்களுக்கும், நான் எப்போதுமே வெளியேற இயலா ஆணைப்போன்ற தைரியத்துடனான தள்ளாடும் நடைக்குமான காரணத்தை அதிகாரத்துடன் கேட்டனபால்யப் பிராயத்தில் புதியவர்களை சந்தித்த பொழுதில் தொடங்கியது அதுவாய்பிளந்து பரிகாசித்து அருவருப்பூட்டும் கூர்பார்வை, எலும்புகளுக்குள்ஊடுருவிச் சென்று பின் அதுவே எலும்பின் மஞ்ஞையானது. கதவினை அறைந்து மூடி முப்பது வருடங்கள் அதனை அடக்குவதிலேயே கழித்தேன்பரிகசித்தவர்கள் அதனைச் சரியாய் உணர்ந்துகொள்ள இயலவில்லை எனினும்நான் அறிந்து கொள்ள நினைப்பது இதனைத் தான்: நீ சொல்வாயா?எனது புன்னகை இவ்வறையின் ஊடே உனைக் கண்டறிந்ததும், ஒரு வித்யாசக் கோணத்தில் என் மணிக்கட்டுகள் நெறிவதை நீ பார்த்ததும் நானோர் கண்ணாடித் தகடெனத் எனை ஊடுருவி நோக்கத் தீர்மானிப்பாயா? அல்லது பதிலுக்குப் புன்னகைப்பாயா?

கோணங்கித்தனமான மேடைநடிகர்கள், ஆசை நாயகிகள், அரசவை கோமாளிகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எனப் பெரும் சரித்திரமுள்ள மக்களிலிருந்து வருகிறேன். சில சமயம் நாங்கள் பெருமித்ததுடனும் வேறு சமயங்களில் போராடும் துணிச்சலுடனும் இருந்தோம். மானுடவியலாளர்கள் முன் நின்றும், மருத்துவர்களின் முன் கூனியும், கண்ணாடிகள் அணிந்தபடி நடித்து சாதாரண மனிதர்கள் போல எங்கள் நிழல்களின் மூக்குகளைத் தேடினோம். பரிகசித்தவர்கள் நிறையப் பணம் கொடுத்தார்கள். இப்போதோ அவர்களுக்கு இலவசமாய்க் கிடைக்கிறது.

மேடையில் இருப்பது பயங்கரமானது. வீனஸ்-ஆக நடித்த சார்ட்ஜீ பார்ட்மனைக் கேளுங்கள் தெரியும். ஒரு கூண்டுக்குள் விலங்கைப் போல ஒரு பிரஞ்சுக்கார இயற்க்கைவாதி சொன்னபடி அலைந்துகொண்டு இருந்தாள். அவளது இறப்பிற்குப் பிறகு, அவளது யோனி ஒரு அருங்காட்சியத்தில் நூற்றாண்டு காலத்திற்கு காட்சிப்பொருளானது. சரித்திரங்களை நான் கேட்டபடியிருக்கிறேன். எல்லா இடங்களிலும் பண்பாடற்றவள், காட்டுமிராண்டி, குறைபாடுற்றவள் எனும் வார்த்தைகளையே கேட்கிறேன்.

அந்தப் பரிகாசக்காரர்கள் நான் செவிடென்றும் மனநோயாளியென்றும் நினைக்கிறார்கள். அவர்கள் நானோர் இருபது வயது ஆண்மகனென்றோ அன்றி நடுவயதுக்காரனென்றோ நினைக்கிறார்கள். அவர்களால் என்னை அனுமானிக்க இயலாமல் ‘சார்’ எனத்தொடங்கி ‘மேடம்’ என முடித்து நடுவில் திகைத்து தடுமாறுகின்றனர். பல வருடங்கள் இத்தொடக்கத்தை மூடிவைக்கும் முனைப்பிலேயே செலவழித்தேன்நண்பர்கள் கேட்ட்துண்டு ‘அந்த மனிதன் உன்னைக் கூர்ந்து நோக்குவதைப் பார்த்தாயா’? ‘யாரவன்’ என நான் பதிலிருப்பேன்அது மிகப் பெரிய வாழ்க்கைத் தத்துவமாயினும் தெரிவுசெய்த ஒன்றில்லை.உண்மையில் அந்தக் கதவு பெருஞ்சத்த்துடன் அடைத்துக்கொண்டதும்நான் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டேன், எல்லாப் பாராட்டுகளையும்,........., ஆர்வங்களையும், அந்தக் கூர்பார்வையில் சுற்றி எறிந்தது போல.

எனது ஆடைகளின் கீழே, எல்லாவிதமான கீழ்த்தரமான வார்த்தைகளுக்கும் கீழே, வெட்கக்கேட்டிற்கும் பாதுகாப்புக் கவசத்திற்கும் கீழே, கண்களும் கரங்களும் அலைந்தபின் எனது கம்பீரத்திற்கும், அழகிற்கும், ஆசைக்கும் திரும்பும் எவரையும் காதலனாக அன்றி வேறெதுவாகவும் என்னால் கற்பனைசெய்ய இயலவில்லை. என் வலக்கையைப் பிடித்து தொட்டிலாட்டியபடி ’உனது நடுக்கம் சுகமாய் இருக்கிறதென அவன் சொல்வதைக் கற்பனைகூடச்செய்து பார்த்ததில்லை, அத்துடன் அவன் ’’நடுங்கும் உன் ஸ்பரிசத்தில் எனக்கொன்றும் கிடைக்கவில்லை’’ எனவும்‘உனது சிறுமூளைப் பாதிப்ப்பைப் போன்ற நடுக்கத்தை நான் நேசிக்கிறேன்’’ எனவும் சொல்வான். அவமானமும் நம்பிக்கையின்மையும் என்னுடலில் வெள்ளமெனப் பிரவேசிக்க, அவனது வார்த்தைகள் அதில் மூழ்கிப் போகும். காமம் மிகு பார்வையை நானெப்போது கற்றுக்கொள்ளத் தொடங்குவேன்?

மேடையில் இருப்பதென்பது நம்பிக்கையின் வெளிப்பாடு. வில்லியம் ஜான்சனைக் கேளுங்கள் தெரியும். மேடையில் ஏறி ஒரு மனிதக் குரங்கைப்போன்ற ஆடையணிந்து, உச்சியின் சிறு குடுமியைத் தவிர்த்து சிகையை மழித்துக்கொண்டு குரங்கு மனிதனாகவே மாறிப்போன மனநிலைக் குறைபாடுள்ள அமெரிக்க ஆப்பிரிக்கன் அவன் சக தொழிலாளிகள் கிறுக்கர்களின் தலைவனென பிரியமுடன் அழைத்தவன் பெரும் பணக்காரனாய் மரித்துபோனான்.ஆனாலும் ஒரு தனித்த பயத்தில் உறைந்த மனிதனாக மேடையின் உரிமையாளர்களும் மேலாலர்களும் கேலிசெய்த, அவமானப் படுத்தி கூண்டுக்குள் அடைத்து மனிதனாகவே அவன் இருந்திருக்கக்கூடும்சரித்திரங்களை நான் கேட்டபடியேயிருக்கிறேன். எல்லா இடங்களிலும் பண்பாடற்றவள், காட்டுமிராண்டி, குறைபாடுற்றவள் எனும் வார்த்தைகளையே கேட்கிறேன்.

இப்போதெல்லாம் நான் பரிகாசிப்பவர்களை பரிகாசத்துடன் விகசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.எனதிந்தப் பரிகாசம் எதிர்ப்புக்கானது. என்னிடம் மட்டும் ஒரு காலக்கடிகை கிடைக்குமெனில்பின்னோக்கிப் பயணித்து அந்த கோணங்கிக் காட்சிக்குச் செல்வேன். காட்சி முடிவுறும் தருவாயில் நுழைந்து, நாள் முழுதும் தன்னை விற்றுவிட்ட கரங்களற்ற அதிசயங்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும்அவர்கள் மேடையை விட்டுக் கீழிறங்கித் திரைச்சீலைகளின் பின்னால் போனபின்பு செல்வேன்.அந்தப் பருமனான பெண், அந்தக் குட்டையான மனிதன், கால்களற்ற மனிதர்கள், திருநங்கைகள், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள், தாடி முளைத்த பெண், பாம்புப் பிடார்ர்கள், வாள் விழுங்குவோர் எனஅனைவரும் அவர்களின் வேடிக்கை உடைகளைக் களைந்த பின் முகங்களைக் கழுவி விட்டுஇரவு உணவுக்காக அமர்வர். நான் தனது பொய்களில் பாதியை நம்பிக்கொண்டுமலிவு நகைகளை வாங்கியணிந்திருக்கும் அவர்களின் வார்த்தைகளை, அவர்களின் சிரிப்பை, கன்னங்களைச் சிவப்பாக்கும் அவர்களின் கோபத்தை, திரட்டுவேன். அவர்களின் செருக்கு கலந்த தீட்சண்யத்தை எனக்குள் மூச்சென உள்ளிழுப்பேன்.அந்தப் பரிகாசக்காரர்கள் என்னை விட்டுச் சென்றுவிட்டார்கள்பரிகசித்தும் நகைத்தும் கற்களை எரிந்தும் சுட்டியும், விவிலியத்தின் வரிகளை மேற்கோள் காட்டியும்என்னை நடத்தைகெட்டவளெனத் தூற்றி இழிவுபடுத்தியும்என் ரணங்களை ஆற்ற முற்பட்டு அவர்களின் இரக்கத்தில் எனை மூழ்கடித்தனர்அவர்களின் வெறுப்பு என்னுள் உறுமலெனக் கேட்கிறது.dddddddfffaஅவர்கள் எதையும் சரியாய் உணர்வதில்லை, ஆனாலும் நான் தெரிந்துகொள்ள நினைப்பது இதனைத்தான்: சொல்வாயா? எனது நடுங்கும் கரங்களுடன் நான் உனை ஸ்பரிசித்தால்நானொரு ஊனமுற்றவளெனவும் அகோரியெனவும் நினைத்து நீ என்னை விலக்கிச் செல்வாயா,அன்றி என்னுடலைத் திறந்து எனது நடுக்கம் உனது சருமப் பளபளப்பில் மின்னக் காண்பாயாநான் ஒளிவு மறைவற்று எதிர்ப்பையும் நாணங்கெட்ட கர்வத்தையும் அப்யாசித்தேன். எவ்வளவு இயலுமோ அவ்வளவு சரசமாடினேன்.கேஸ்ட்ரோவில், கரடிபோன்ற மயிரடர்ந்த தடிமனான தாடியுடன்திறந்த மார்பினைக் காட்டியபடியிருக்கும் முரட்டுமனிதர்களைத் தேடினேன்அவர்களில் ஒருவன் என் கண்களைக் கவர்ந்தான். ஒரு நீண்ட நொடி அவனது பார்வையில் சிக்குண்டிருந்து அவனது கண்கள் என்னுடலில் நழுவிச் செல்வதைக் கவனித்தேன். அவன் என்னை ‘நீயோர் ஆணா அல்லது பெண்ணா’ என எவ்வித ஆர்வமும் இன்றி வினவினான். நான் பதிலிறுக்கவில்லை. புன்னகைத்தபடியே அவனிடமிருந்து விலகிச்சென்றேன், எனதுடல் சூடாக.

வேறோர் உலகின் வேறோர் தருணத்தில், நானோர் பெண்ணாகவோஅல்லது பையனாகவோ அன்றி வேறேதாவதாகவோ இருந்திருக்கக் கூடும்ஆங்கிலத்தில் அதற்கான சரியான வார்த்தைகளோ இலகுவான வார்த்தைகளோ இல்லைஎன்னிடல் இருப்பதெல்லாம் மனிதனுடையதோ அன்றி மனுஷியுடைதோ ஆன நிழலுலகு தான்,எதிர்மறைகளின் இடையே பிணக்கப்பட்டிருக்கும் தொங்குபாலம்என்றேனும் ஓர் நாள் நம்மை ஆணுக்கோ பெண்ணுக்கோ சொந்தமற்ற, இரவுமற்ற பகலுமற்ற, துளையோ முளையோ அற்ற இடத்திற்கு போவதற்கான மொழியொன்று கிடைக்கக்கூடும். ஆயினும் இப்போது, என்னை மாலை மூன்று மணிக்குசூரியனின் பாய்வெளி போன்று திண்மையான பருப்பொருள்கள் மீது சீர்வேகத்தில் செலுத்தும் வன்மக் கரடிகளிடம் நான் என்ன சொல்லிவிட முடியும்?

மேடையில் இருப்பது எப்போதுமே அபாயம் மிகுந்தது. பில்லி டிப்டனைக் கேளுங்கள்அவன் ஆரவார இசைக்கூத்தில் தனது ப்யானோ, சாக்ஸஃபோன் மற்றும் தினசரி இன்பியலைத் தொடர்ந்து செய்துவந்தான்; ஐம்பது ஆண்டுக்காலம்ஒரு பெண்ணுடலுடன் ஆணாக வாழ்ந்திருந்தான். அவனுக்கு மூன்று குழந்தைகளும் இருந்தனஅந்த அருவருப்பூட்டும் விகாரப் பரிகாசங்கள் அவனது மரணத்திற்குப் பின் தொடங்கினதலைப்புச் செய்திகள் ’ஜாஸ் இசைக்கலைஞன் விநோதமான ரகசியத்தை கமுக்கமாக வைத்துக்கொண்டே வாழ்வைக் கழித்துவிட்டான்’ என முழங்கின. நான் சரித்திரங்களைக் கேட்டபடியிருக்கஎல்லா இடங்களிலும் உருக்குறைவுள்ளவள், ஐயுறத்தக்கவள் என்ற வார்த்தைகளையே கேட்கிறேன்.


இந்தப் பரிகாசக்காரர்களை பட்டுத் தெறிக்கும் நீண்ட பார்வையால்எப்போதுமே கூர்ந்து நோக்க நேர்கிறது – பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள்,மளிகை பொருட்களுக்கான பையோடிருக்கும் வயோதிகப் பெண்மணிகள்,வேலைக்குச் செல்லும் தொழில் நெறிஞர் – அனைவருக்கும் தயக்கமற்ற நேர்பார்வையை திருப்பித் தரவேண்டியிருக்கிறது. ஆனால், அவர்கள் திரும்பிச் செல்லும் முன், என்னிடம் ஒரு முறை,ஒரே ஒரு முறை எதனை அத்தனை நிலைக்குத்திய முனைப்பாக பார்க்கிறார்கள் எனயாரேனும் சொல்லுங்கள். எனது நடுங்கும் கரங்களையா? என் சிவந்த கூந்தலையா?பதட்டதுடன் நான் நிற்கும் நிலையா,திரண்ட தசைகளுடனான சரிசமமற்ற தோள்களா? முரட்டுக் குரலிலான எனது பேச்சா?சொல்லுங்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரேமாதிரி ஒரு உலோகப் பார்வையுடன் கடந்து செல்கிறார்கள்சபலத்தனமான ஒரு புகைப்படக் கண்காட்சி இருக்கிறது. சிறிய உடலமைப்புள்ள, தளர்வற்ற, வெண்மையான, புரிதல் திறனற்ற ஒஹியோவில் வளர்ந்த ஹிரமும் பார்னே டேவிஸும்; வெள்ளாட்டின் தாடியுடன், கேசம் தோள்களின் கீழே வழிய, மென்மையாக புகைப்படக் கருவி வழியே பார்க்கிறார்கள்.மேடையில் அவர்கள் ’வைனோவும் ப்ளூட்டோவும், போர்னியோவில் இருந்து வந்த முரட்டு மனிதர்கள்” என இசைத்தபடியே, பற்களை நரநரத்து அதிர்வூட்டும் உறுமலுடன், பிணைத்திருந்தசங்கிலிகளைப் பார்வையாளர்களை நோக்கி அசைத்தனர். ரூபஸ் அந்நிகழ்ச்சியைக் காண நிறைய பணம் கொடுத்து வந்திருந்தான். இசைப்பதை நிறுத்திவிட்டு இடையிடையே அவர்களது நேரான மென்பார்வையை ரூபைஸை நோக்கி வீசி பரிகாசக்காரர்களைப் பரிகாசிப்பதாகத் தோன்றியது.அவர்கள் அதனைச் சரியாய் உணர்வதில்லை; ஆயினும் நான் தெரிந்துகொள்ள விரும்புவது இதைத்தான். நான் இவ்வுலகில் உலவும் போது, நீ எனக்கான பிரதி பெயரைத் தேடி முன்னேறுவாயாஅன்றி ஒரு மாலையிருளின் நதிக்கரையை அதன் இதமான உடைதல்களற்ற மேற்பரப்பையும், சூர்யக் கதிர்களின் பின்னல்களற்றுக் குளிர்ந்த சூரியனையும் கற்பனை செய்வாயா?செங்குத்துப் பாறைகளிலிருந்து குதிப்பவர்கள் தங்கள் உடல்களை பறப்பது போலோ அன்றி பூமியிலிருப்பது போலோ அல்லாமல் ஐம்பதடி உயரத்திலிருந்து வீசுகிறார்கள், மூன்று குட்டிக்கரணம்மற்றுமோர் ஒரு சிறிய திருப்பத்துடன் சிறு நீர்ச்சலனமும் அற்று நீர்ப்பரப்பில் கட்டற்று வீழ்கிறார்கள்அதனை நீங்கள் சரியாய் உணர்ந்துகொள்ள இயலுமாஹிராமையும் பார்னேயையும் எனது ஆசான்களாகக் கொண்டு எனது உடலாழத்தின் எலும்புகளுக்கு உண்மையாக கூர்ந்து நோக்குகையில் வேறொன்றாக மாறும் இடம்மெதுவென கவனிக்கிறேன், எங்கே பலம் துவைந்து மென்மையாகும், அன்பு முழுமையாகி நெடுவெளியென பரந்து விரியும்? எங்கே பால்வகைகள் எளிமையான இருமக் குறிமுறைகளைத் தாண்டிச் செல்லும்? எங்கே நாம் ஒருவரை ஒருவர் வெற்றுப்பகட்டின் வீராப்புக்கும் பிரம்படிபோன்ற சொல்வீச்சுக்கும் உற்சாகமூட்டுகிறோம், எங்கே எங்கே தடங்கலற்று சுழன்றியங்கி கௌரவத்தின் மொழியை கற்றுக்கொள்கிறோம் எங்கே நமது உடல் அகமாகும் இடம்? பரிகசித்து, வாய்பிளந்து உற்றுநோக்கி..;எனக்குச் சொல்லத்தெரியவில்லை அது எப்போது முதன்முதலாய் நிகழ்ந்ததென்று.

*

எழுத்தாளரும், வினைத்திட்பக் கோட்பாடுகளுள்ள ஆசிரியையுமான எலி க்ளேர் இயலாமை, பால்ரீதியான உடலுறவு போன்றவற்றுக்கான வலிமைக் குரலெழுப்பிச் செயலாற்றுபவர். அவர் பெருமூளைசிரையுள்ள திருநங்கையெனவும் அறியப்படுகிறார்.


மொழியாக்கம் : தாரா கணேசன்

No comments:

Post a Comment

                                  அண்ணன் "ச.முருகபூபதி" மிக முக்கியமான உரையாடல்.                                     ...