Sunday 10 June 2012

நித்திய யெளவன முயல்குட்டி

                                                       (Painting - Gnanaprakasam Sthabathy)

பின்னிரவில் அறைக்குள் நுழையுமவள்
மெத்தையின் மீது படுத்துக்கொண்டு
வான் பார்க்கும் பாதங்களை
முன்பின்னாக ஆட்டிக்கொண்டே
ஏதேனுமொரு புத்தகத்தை வாசிக்கிறாள்.
ஒழுங்கற்ற அவளது அறைக்குள்
சிதறிக்கிடக்கின்றன புத்தகங்கள்.
அறையின் மேல்கூரையில் நகரும்
சுவர்ப்பல்லி பூச்சியை நோக்கி
நாவை நீட்டுகிற கணத்தில்
தன் ஆடை களைந்து நிர்வாணம் அணிகிறாள்.
அவளது யெளவனத்தில் விழுந்தெழுந்து
ஓடுகின்றான் புத்தகத்தினுள்ளிருந்து
வெளிக்குதித்த பதின்பருவத்தவன்.
களைப்பின் மிகுதியில் கண்ணயர்கிறவள்
யாரோ ஒருவனின் உலகிற்குள்
முயல்குட்டியாகி தாவி            தாவி
ஓடுகிறாள்.
படுக்கை விரிப்பில் புரள்கிறது
ஊனப்பூச்சி.

-நிலாரசிகன்

1 comment:

  1. கவிதையும் ஓவியமும் அற்புதம்

    ReplyDelete

மயிற்பீலி ( சமூக அநீதிகளைப் பற்றி கோடுகள் பேசுகிறது )                         Publishing in S L A T E  Magazine                 ...